ஒரு நாளைக்கு சர்க்கரை நோயாளிகள் எத்தனை பாதாம் சாப்பிடலாம்?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நட்ஸ்களிலேயே பாதாம் மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

இது முழுமையாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் அதிக கலோரிகளைக் கொண்டது.

இந்நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தினமும் பாதாமை சரியான அளவில் உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஏனெனில் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதாம் மிகச் சிறப்பான ஸ்நாக்ஸ். இதில் உள்ள மக்னீசியம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றது.

மேலும் பாதாமை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டு வந்தால், அவர்களின் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இதய நோயின் அபாயமும் குறையும் என சொல்லப்படுகின்றது.

சர்க்கரை நோயாளிகள் பாதாமை எப்படி சாப்பிட வேண்டும்?

சர்க்கரை நோயாளிகள் மார்கெட்டுகளில் விற்கப்படும் உப்பு சேர்க்கப்பட்ட பாதாமையோ அல்லது வறுத்த பாதாமையோ சாப்பிடக்கூடாது.

மேலும சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சை பாதாம் தான் சிறப்பானது ஆகும்.

அதிலும் இந்த பாதாமை சர்க்கரை நோயாளிகள் அதிகாலை அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாமில் கலோரிகள் அதிகம் உள்ளதால் உங்கள் டயட்டில் பாதாமை சேர்ப்பதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும். இதனால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம்.

மேலும் ஒரு சர்க்கரை நோயாளி சாதாரண அளவு கலோரிகளை எடுத்து வந்து, பாதாமையும் அன்றாடம் உட்கொண்டால், அது அவர்களது மொத்த கலோரியின் அளவை அதிகமாக காட்டும்.

எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க பாதாமை உட்கொள்வதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளை உண்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

எத்தனை பாதாம் சாப்பிடலாம்?

சாதாரணமாக ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் இன்னும் அதிகமாக சாப்பிடலாம்.

எனவே ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிடுவதே பாதுகாப்பானதாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்