நீங்கள் வாய் துர்நாற்றத்தை போக்க மவுத்வாஷ் பயன்படுத்துபவரா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

வாய் துர்நாற்றத்தை நீக்குவதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மவுத்வாஷ்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தொலைக்காட்சி விளம்பரங்களில் கவரப்பட்ட பலரும் இதனை பயன்படுத்திவருகின்றனர்.

மவுத்வாஷ் ஆனது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையில் உள்ள பக்டீரியாக்களை அழிக்கின்றன.

இதனால் சில மணி நேரத்திற்கு துர்நாற்றம் எழுவது தவிர்க்கப்படுகின்றது.

எனினும் மவுத்வாஷினை பயன்படுத்துவது புற்றுநோயை உண்டாக்கும் என முன்னர் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது உடற்பயிற்சியின் பின்னர் மவுத்வாஷினை பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவு பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது உடற்பயிற்சியின் பின்னர் மவுத்வாஷ் பயன்படுத்துவதனால் இரத்த அழுத்தம் குறைவடைவதாகவும் இது உடற்பயிற்சியினால் ஏற்படக்கூடிய நன்மைகளை தடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியின்போது நைட்ரிக் ஒட்சைட் அதிகம் உற்பத்தியாகின்றது.

இது உடற்பயிற்சியின்போது இரத்த அழுத்தம் கூடும்போது இரத்தக்குழாய்களின் விட்டத்தை அதிகரிக்க உதவுகின்றது.

இவ்வாறு இரத்தக்குழாய்களின் விட்டம் அதிகரிப்பதனால் அதிகளவு இரத்தம் தசைகளுக்கு சென்று ஆரோக்கியத்தை ஏற்படுத்துகின்றது.

இச் செயற்பாட்டில் நைத்திரிக் ஒட்சைட்டை உருவாக்குவதில் பக்டீரியாக்களின் பங்கு அளப்பரியது.

ஆனால் மவுத்வாஷ் பயன்படுத்தும்போது இவ்வாறு நன்மை பயக்கும் பக்டீரியாக்கள் அழிவடைகின்றன.

எனவே இரத்தக்குழாய்களின் விட்டத்தில் அதிகரிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு தசைகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடைகின்றது.

எனவே ஆரோக்கியம் மந்தநிலையை அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்