ஈறுகளில் சீழ் பிடித்துள்ளதா? இதனை எப்படி சரி செய்வது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பயோரியா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஈறு பிரச்னையாகும். இது ஈறுகளில் அழற்சியை ஏற்படுத்தும்.

இது பற்களின் வேரைச் சுற்றியுள்ள பகுதியை பெரிதும் பாதிக்கும்.

பயோரியா பிரச்னைக்கான அறிகுறிகளாவன பற்களைத் துலக்கும் போது இரத்தக்கசிவு, ஈறுகளில் புண், சாப்பிடும் போது பல் வலி, வாய் துர்நாற்றம் மற்றும் வீக்கம், ஈறுகள் சிவந்து காணப்படுவது போன்றவைகளாகும்.

இந்த பிரச்னையிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும்.

மாதுளை பட்டை

500 கிராம் உலர்ந்த மாதுளை பட்டை, 10 கிராம் படிகாரம், எப்சம் உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் இந்த பொடியால் தினமும் 2 முறை பற்களைத் துலக்க வேண்டும். இதனால் எப்பேற்பட்ட ஈறு பிரச்னைகளும் விரைவில் குணமாகும்.

விளக்கெண்ணெய்

200 மிலி விளக்கெண்ணெய், 100 மிலி தேன் மற்றும் 5 கிராம் கற்பூரம் ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்து, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் வேப்பங்குச்சியை எடுத்து, இந்த பேஸ்ட்டைத் தொட்டு, பின்பு எப்போதும் போன்று பற்களிலும், ஈறுகளிலும் தேய்க்க வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கேரட் மற்றும் பசலைக்கீரை

இந்த இரண்டையும் கொண்டு சூப் தயாரித்து தினமும் குடியுங்கள். இல்லாவிட்டால்,

கேரட் ஜூஸ் மற்றும் பசலைக்கீரை ஜூஸை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் குடித்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கொய்யா மற்றும் உப்பு

நன்கு கனியாத கொய்யாவை உப்பு தொட்டு வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் பயோரியா குணமாகும்.

அதேப் போல் பழுத்த கொய்யா இலையை வாயில் போட்டு மெல்லுவதாலும், நன்மை கிட்டும். இது ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாக்கும்.

எலுமிச்சை சாறு

அதற்கு எலுமிச்சை சாற்றினை ஈறுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் இது சற்று எரிச்சலைத் தரலாம். எலுமிச்சை சாற்றினைக் கொண்டு தொடர்ச்சியாக மசாஜ் செய்து வந்தால், விரைவில் இரத்தக்கசிவு நின்றுவிடும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

கடுகு எண்ணெய்

பற்களைத் துலக்கிய பின், கடுகு எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, ஈறுகளை மசாஜ் செய்யுங்கள்.

ஒருவேளை உங்களது ஈறுகளல் வலி கடுமையாக இருந்தால், பஞ்சுருண்டையில் இந்த கலவையை நனைத்து, ஈறுகளில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலைக் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்யுஙக்ள். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி பற்களுக்கு கிடைத்து, இரத்தக்கசிவு நிறுத்தப்படும்.

வாழைப்பழம்

வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்வதன் மூலமும், ஈறு பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயத் துண்டு ஒன்றை எடுத்து, வாயினுள் பற்களுக்கு அடியில் வையுங்கள். சில நிமிடங்கள் வாயில் எச்சில் சேரும் வரை அப்படியே இருங்கள்.

இதனால் ஈறுகளில் உள்ள அழற்சி குறைந்து, பயோரியா பிரச்னை சரியாகும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் வைத்திருங்கள். முக்கியமாக இந்த 10 நிமிடமும் அவ்வப்போது வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

பின் எண்ணெயை துப்புங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், ஈறுகள் ஆரோக்கியமடைந்து, இரத்தக்கசிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்