நீண்ட தூர பிரயாணங்களில் போது ஏற்படும் வாந்தியை தடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம்மில் பலருக்கு நீண்ட தூர பிரயாணங்களில் போது வாந்தி ஏற்படுவது சகஜம் தான்.

பலநேரங்களில் நம்மால் வாந்தியை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

குறிப்பாக நம்கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் நுண் கிருமிகளால் இந்த ஒவ்வாமை தூண்டப்படுகிறது. இதன் மூலம் வயிற்றில் ஒரு வித கலக்கமும், வாந்தியும் ஏற்படுகிறது எனப்படுகின்றது.

இதற்கு மருந்துகளை விட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணீரில் போட வேண்டும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து நாள் முழுதும் இந்த நீரை அருந்த வேண்டும். இஞ்சி வயிற்றின் எரிச்சலை போக்கி உடனடி நிவாரணம் கொடுக்கும்.
  • ஒரு கிராம்பு துண்டை வாயில்போட்டு நன்றாக சப்ப வேண்டும். கிராம்பின் வாசனையும் சுவையும் உடனடியாக வாந்தியை கட்டுப்படுத்தும். நாவின் சுவைமொட்டுகளில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.
  • சர்க்கரை மற்றும் உப்பு நீரின் கலவையை குடிப்பதன் மூலம் உடலை திறமையான செயல்பாட்டு வரம்புக்கு ஏற்றவாறு சமன் செய்யும். இந்த பானம் உடல் நீர் வறட்சி அடையாதவாறு பாதுகாத்து சோர்வடையாமல் காக்கிறது.
  • எலுமிச்சையில் உள்ள வைட்டமின்களும் மினரல்களும் உடனடியாக வாந்தியை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் ஒரு டம்பளர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து பருகலாம். தேவைபட்டால் சிறிது தேனை சேர்த்து கொள்ளலாம்.
  • ஒரு சிறிய இடைவெளியில் சோம்பை சிறிது சிறிதாக சுவைக்கும்போது வாந்தி கட்டுப்படும். இது வாயின் சுவையை புதுப்பித்து புத்துணர்ச்சியை கொடுக்கும் .
  • உடல் இழந்த வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகளை ஆரஞ்சு பழச்சாறு வேகமாக மீட்டு கொடுக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும் தெம்பை உடலுக்கு இது திரும்ப பெற்று தருகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்