ஒரு வாரத்திற்கு நீங்கள் எத்தனை முட்டை சாப்பிடுகிறீர்கள்? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க

Report Print Santhan in ஆரோக்கியம்

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலானார் விரும்பி சாப்பிடும் உணவாக முட்டை இருந்து வருகிறது. சாப்பிட்டிற்கு ஏதாவது தொட்டுக் கொள்ள வேண்டும் என்றால், சாதரணமாக இரண்டு முட்டையை வாங்கி வந்து பொரியலோ, அவியலோ செய்து சாப்பிடுகின்றனர்.

அந்தளவிற்கு முட்டை இப்போது தினம் தினம் உணவில் பயன்படுத்தப் படும் பொருளாக உள்ளது.

அப்படி பலரும் சாப்பிட்டும் இந்த முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

அதே போல், அதில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதும் அவ்வளவு உண்மை.

முட்டையில் புரதத்துடன், பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், சிங்க், வைட்டமின் டி, பி6, பி12, ஃபோலிக் அமிலம், தையாமின் மற்றும் இரும்புச் சத்து உள்ளது.

மேலும் இருதய நோய்கள், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், போன்றவையும் இந்த முட்டை உண்பதால் ஏற்படுகிறதென சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முட்டையில் 180 – 300 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. அதனால் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.

ஒருவர் வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம். முட்டையை பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகம் இருக்கும்.

அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், இருதய நோய்கள் ஏற்படலாம். ஆனால் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers