கடுக்காய் தூளில் இவ்வளவு நன்மையா? தினமும் இரவில் படுக்கும்போது சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் கடுக்காயும் ஒன்றாகும்.

கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது.

அதுமட்டுமின்றி மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

அந்தவகையில் கடுக்காய் பொடியில் உள்ள மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். பல்லும் உறுதியாகும்.
  • கடுக்காய்ப் பொடியை 2 கிராம், தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.
  • 25 கிராம் கடுக்காய்ப் பொடியில், ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.
  • கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.
  • இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும். மலம் மிதமாக இளகிப் போகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers