தேங்காய்ப்பூ கட்டாயம் சாப்பிடுங்க...மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களை தடுக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.

தேங்காவை போல தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

அந்தவகையில் தேங்காய் பூவை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும்.
  • அதிக பணிச்சுமை உள்ளவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.
  • தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.
  • அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.
  • இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.
  • தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.
  • புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸைஉடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.
  • தேங்காய் பூ உள்ள கலோரியின் அளவும் மிக மிகக் குறைவாக இருக்கும். இது நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுபு்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது.
  • தேங்காய் பூ சட்னி சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்னைகளையும் தீர்க்க உதவுகிறது. தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் உடையது
  • தேங்காய் பூ இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உங்களுடைய இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers