உடலில் ஆங்காங்கே கட்டிகள் காணப்படுகின்றது? இதோ அருமையான நாட்டு வைத்தியங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சிலருக்கு சுகாதாரமற்ற செயற்கை வாசனை அதிக அளவில் சேர்க்கப் பட்ட அதிக காரத் தன்மை கொண்ட கொழுப்பு வகை உணவுகள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் சிலருக்கு உடலில் ஆங்காங்கே கட்டிகள் ஏற்படுகின்றது.

சாதாரண வகைக் கட்டிகளில் கொழுப்புக் கட்டி,நார்க் கட்டி மற்றும் நீர்க் கட்டி எனப் பல வகைகள் இருக்கிறது.

இந்த கட்டிகள் பல்வேறு காரணங்கள் வருகின்றது.

இது சிலருக்கு அதிக உடல் சூட்டினாலும், சிலருக்கு நீரிழிவு பாதிப்பின் காரணமாக, அதிக அளவிலான மதுப் பழக்கத்தின் மூலம் உடலில் ஏற்பட்ட நச்சுத் தன்மை அதிகரிப்பின் காரணமாகவும் அதிக உடல் எடையின் காரணமாகவும் சிலருக்கு கட்டிகள் ஏற்படுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட மருந்துகளை விட நாட்டு வைத்தியங்கள் மூலம் வெளியேற்ற முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • எருக்கன் இலைகளை எடுத்து விளக்கெண்ணை இட்டு சூட்டில் வதக்கி, அந்த இலையை, கட்டி அல்லது வீக்கத்தில் வைத்து இரவில் கட்டிவர, அவை சரியாகும்.
  • அத்திமரக் கிளையை ஒடித்தால், அதிலிருந்து பால் வெளியில் வரும். அந்தப் பாலைக் கொண்டு தடவி வர, கட்டிகளை சரி செய்யலாம்.
  • மஞ்சளை இழைத்து அந்த மஞ்சளுடன் சலவை சோப்பை சேர்த்து கலக்க, கருஞ்சிவப்பு நிறத்தில் அந்தக் கலவை மாறும். அதனை எடுத்து கட்டி உள்ள இடத்தில் தடவி வரலாம்.
  • சிறிதளவு தேன் மற்றும் சிறிது சுண்ணாம்பு எடுத்து நன்கு கலக்கி, அந்தக் கலவையை கட்டிகளின் மேல் பூசலாம். மேற்சொன்னவை கூட, இதையும் செய்யலாம்.
  • சோற்றுக் கற்றாளை மடல்களை எடுத்து, அதன் சதைப் பகுதியை நன்கு அலசி அத்துடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வர, உடல் நச்சு காரணமாக உடலில் உண்டான கட்டிகள் நீங்கிவிடும்.
  • குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம் தவிர்ப்பது, உடலுக்கு நன்மை செய்யும். கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • கேரட், அவரை, வெண்டைக்காய் மற்றும் பீன்ஸ் உணவில் அதிக அளவில் சேர்ப்பது நல்லது. சிறிய வெங்காயம் உணவில் அல்லது தனியாகவோ சாப்பிட, நலம் பயக்கும்.
  • குப்பைமேனி இலைகளை அரைத்து அத்துடன் மிளகு சேர்த்து காலை வேளைகளில் சாப்பிட்டு வர, உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து, உடலுக்கு நலம் தரும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers