பெருங்குடலை மூன்றே நாட்களில் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த சாலட்டை செஞ்சு சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெருங்குடல் (Large intestine) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களின் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும்.

மனிதர்களின் பெருங்குடல் அவர்களின் இடுப்புச் சரிவின் வலது புறத்தில் இடுப்புக்கு கீழே அல்லது கீழிருந்து தொடங்குகிறது.

இங்குதான் நீர் உறிஞ்சப்படுகிறது, மீதமுள்ள கழிவுப்பொருட்களை எல்லாம் சுத்தம் செய்து அகற்றுவதற்கு முன்னர் மலமாக சேமிக்கப்படுகிறது.

குறிப்பாக பெருங்குடலும், அதன் இயக்கமும் சிறப்பாக இருந்தால், நமது ஆரோக்கியமும் சிறப்பாக அமையும்.

அந்தவகையில் பெருங்குடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்.

அதற்கு இயற்கை உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றது. பெருங்குடலை மூன்றே நாளில் சுத்தம் செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சாலாட்டை சாப்பிடாலே போதும்.

தற்போது அந்த சாலட்டை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையானவை
  • முட்டைகோஸ் மூன்று பங்கு
  • பீட்ரூட் ஒரு பங்கு
  • கேரட் ஒரு பங்கு
  • தேவையான அளவு உப்பு
  • கொஞ்சம் நீர்
செய்முறை

இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும்.

கலக்கிய பிறகு சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை அதன் மேல் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த சாலட் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, மினரல் சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன.

நன்மைகள்

இந்த சாலட் மூலம் உங்களுக்கு கிடைக்கும் சத்துக்கள் செரிமான மண்டலத்தின் செயற்திறன் சிறக்க உதவுகிறது.

இதன் மூலமாக உண்டால் பெருங்குடல் இயக்கம் சீராகி, உடலில் உள்ள நச்சுக்கள் வேகமாக வெளியேற்றப்படும்.

இந்த சாலடை நீங்கள் தொடர்ந்து மூன்று நாள் உட்கொண்டு வந்தால் இது உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தி பெருங்குடல் சுத்தமாகவும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் வழிவகுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...