ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏன் இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகம்? அதனை எப்படி சரி செய்வது

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைப்பது என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும்.

ஏனெனில் ஹார்மோன் மாற்றங்கள், PCOS, மாதவிடாய் கோளாறுகள் என பல பிரச்சினைகளால் பெண்களின் இடுப்புப் பகுதியை சுற்றி கொழுப்புகள் அதிகம் சேர்ந்துவிடும்.

உடலின் மற்ற பாகங்களைக் காட்டிலும் இடுப்புப் பகுதியில் அதிக கொழுப்புகள் சேர்வதே இதற்கு காரணம் அமைகின்றது.

இதனை சில இயற்கை உணவுகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

தற்போது வயிறு வீக்கத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

  • பச்சை இலை காய்கறிகளில் அனைத்து ஊட்டச்சத்துக்களின் கலவையும் உங்கள் வயிற்று கொழுப்பை குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது.
  • ஓட்ஸ் நாள்முழுவதும் உங்கள் பசியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும், இதன்மூலம் உங்கள் வயிறை சுற்றியிருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படும்.
  • முட்டை தினமும் காலையில் வேகவைத்த முட்டைகளை காலை உணவாக சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
  • தினமும் நட்ஸ் மற்றும் விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.
  • தினமும் பருப்பு வகைகள் இருப்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்