வயிற்று வலி வரும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

வயிற்று வலி என்பது அனைவருமே சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சினை ஆகும்.

வயிற்று வலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக அஜீரணம், தொற்று, வாய்வு, மலச்சிக்கல், என சாதாரண பாதிப்புகள் நிறைய உண்டு.

வயிறு வலி வந்ததுடன் சிலர் கண்ட கண்ட மாத்திரைகளையும் வயிற்று வலியை ஏற்படுத்த கூடிய உணவுகளையும் உட்கொள்ளுவது உண்டு. இதனால் வயிற்று வலி அதிகரிக்குமே தவிர குறையாது.

அந்தவகையில் எந்த மாதிரியான உணவுகளையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

சாப்பிட கூடாதாவை
 • பால் உணவுகளில் இருக்கும் லாக்டோஸ் உங்கள் வயிற்று வலியை இன்னும் அதிகப்படுத்திவிடும். இவை எளிதில் செரிக்காது. இதனால் செரிமான மண்டலம் இன்னும் அதிகமாக எதிர்ப்புகளை தெரிவிக்கும்போது , வலி தீவிரமாகும்.
 • வயிற்று வலி இருக்கும்போது கொழுப்பு, எண்ணெய் உணவுகளை சாப்பிடும்போது வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவையும் ஏற்படும்.
 • காரமான உணவுகளை வயிற்று வலி இருக்கும்போது அறவே தவிருங்கள். ஏனெனில் கார உணவுகள் ஜீரண நொதிகளை தூண்டிவிடும். இதனால் அதிக அமிலத்தன்மை உண்டாகி நெஞ்செரிச்சல், எரிச்சல் போன்றவை உண்டாகும்.
 • இனிப்பு வகைகளை வயிற்று வலியின் போது சாப்பிடாதீர்கள். இவை உங்கள் ஜீரண மண்டலத்தை பாதிக்கும் மற்றும் தொற்றினை இன்னும் அதிக தீவிரப்படுத்துவதால் நிலைமை இன்னும் அதிகம் பாதிக்கப்படும்.
 • வயிற்றுப் பிரச்சனை இருக்கும்போது காபி குடிக்கக் கூடாது. ஏனெனில் காபி அஜீரணத்தை மற்றும் குடலின் செய்ல்பாடுகளை குறைக்கும். மலச்சிக்கலையும் உண்டு பண்ணும்.
 • வயிற்று வலி வந்தால் சோடா குடிக்காதீர்கள். அதிலுள்ள கார்பனேற்ற மூலக்கூறுகள் இன்னும் அதிக வாய்வை வயிற்றுக்குள் உண்டு பண்ணும்போது வலி அதிகமாகும்.
 • பொதுவாகவே கார்போஹைட்ரேட் உணவுகள் செரிப்பதற்கு தாமதமாகும். அவற்றினால் செய்யப்பட்ட சுத்தரிக்கப்பட்ட அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவை தவிருங்கள். இவை குடல்களில் ஒட்டிக் கொண்டு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
 • வயிற்று வலி இருக்கும்போது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிருங்கள். இவை வயிற்றுப் போக்கை உண்டாக்கிவிடும்.
 • மது எப்போதுமே குடிக்கக் கூடாது. குறிப்பாக வயிற்று வலி இருந்தால் நீங்கள் மதுவின் பக்கமே போகக் கூடாது. இவை நோயின் அறிகுறிகளை இன்னும் தீவிரப்படுத்திவிடும்.
சாப்பிட வேண்டியவை
 • வயிற்று வலி என்றால் தயிர் மற்றும் யோகார்ட்டை சாப்பிடுங்கள். இவை நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்போது உடலுக்கு நன்மைகளை தருகிறது.
 • மாதுளைச் சாறு வயிற்றுப் பாதிப்புகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
 • வயிற்று வலிக்கு நல்ல மருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. பலவீனமன தசைகளை வலுப்படுத்துகிறது.
 • பயிற்றம் பருப்பு மற்றும் அரிசியை வறுத்து பொடி செய்து கஞ்சியாக காய்ச்சி குடிப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும். பயிற்றம் பருப்பு வயிற்று உபாதைகளை நீக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்