சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு வீக்கமாக உள்ளதா? அப்போ நீங்கள் உணவில் சேர்க்கும் இந்த காய்கறிகள் தான் காரணமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் அன்றாடம் சாப்பிடும் சில காய்கறிகளில் இருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் வாயுப்பிரச்சினை உருவாக காரணமாக அமைகிறது.

குறிப்பாக சில காய்கறிகள் சாப்பிட்டவுடன் வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும். காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் அவற்றால் இந்த பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அந்தவகையில் எந்தெந்த காய்கறிகள் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

  • பீன்ஸில் உள்ள புரோட்டின் மேலும் இதில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்துக்கள் இரண்டுமே உள்ளதால் இவை பெருங்குடலில் நுழையும்போது அங்கிருக்கும் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து இவை வீக்கத்தை ஏற்படுத்தும்.

  • பட்டாணி உங்கள் வயிறுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

  • காலிப்ளவரில் உள்ள நன்கு வேகவைத்து சாப்பிட கூடாது. இது வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும்.

  • காளான்களில் ராஃபினோஸ் என்ற செரிமானம் அடையாத சர்க்கரை உள்ளது, இது பெருங்குடலில் நொதியாக மாறுகிறது. இதனால் வாயுக்கோளாறு மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

  • சோளத்தில் எளிதில் உடைக்க முடியாத கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது உங்கள் வயிற்றில் GI பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாயுக்கோளாறை உருவாக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்