ஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா ? அப்போ காலை உணவா இதை சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது அவசியமானதாகும்.

காலை உண்ணப்படும் உணவு தான் உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலை வலிமையாக்குகின்றது.

அதுமட்டுமின்றி காலை உணவு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, குடலையும் சுத்தம் செய்யும் மற்றும் மலச்சிக்கல், மோசமான குடலியக்கம் மற்றும் உடல் பருமன் இருப்போருக்கும் உதவி புரிகின்றது.

உடற்பருமன் இருப்போர்கள் ஒரு மாதத்தில் 3 கிலோ வரை குறைக்க வேண்டும் என்றால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவை உட்கொண்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • உலர்ந்த ப்ளம்ஸ் - 5-7
  • குறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப்
  • ஆளி விதை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  • கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை

இந்த காலை உணவை முதல் நாள் மாலையிலேயே தயார் செய்து கொண்டு, காலையில் சாப்பிட நன்றாக இருக்கும்.

அதற்கு உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை 100 மிலி கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர், ஆளி விதை பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள ப்ளம்ஸை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சேர்த்து நன்கு கலந்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும்.

மறுநாள் காலையில் இதனை உட்கொள்ளுங்கள். ஆனால் இதனை சாப்பிட்ட முதல் நாள், சற்று வித்தியாசமான உணர்வை உணர்வீர்கள்.

குறிப்பு

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது, தினமும் உடற்பயிற்சி செய்து வருவதோடு, உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...