உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த ஒரு பொருள் போதுமே!

Report Print Kabilan in ஆரோக்கியம்

பெரும்பாலான இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் வால்நட், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பல ஊட்டச்சத்துக்களை கொண்ட வால்நட் சருமம் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள், சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதால் உணவில் இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தம்

வால்நட்டில் இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. அத்துடன் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.

அத்துடன் ஒமேகா 3 அமிலம் மற்றும் ஆல்பா லினோலிக் அமிலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், கார்டியோ வாஸ்குலர் பிரச்சனைகள் இருப்பவர்கள் வால்நட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறைந்த கொழுப்புகள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வதுடன், வால்நட்டை எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள ALA ஒமேகா 3 அமிலம், பாலிபீனால்கள் ஆகியவை மக்னீசியம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகின்றன.

எனவே, ஒரு நாளைக்கு ஒரு கிராம் வால்நட் சாப்பிடும்போது, இதய நோய்களின் அபாயம் குறையும்.

பக்க விளைவுகள்

அதிக அளவு வால்நட்களை எடுத்துக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். 45 கிராம் அளவிற்கு மேல் ஒருபோதும் வால்நட்களை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers