தீராத முதுகு வலி, தசைப் பிடிப்பால் அவதியா ? இதனை முயற்சித்து பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றை நவீன உலகில் வேலைக்கு செல்லும் ஆண்களும், பெண்களும் அன்றாடம் முதுகுவலியினால் அவதிப்படுவதுண்டு.

இதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பது தான்.

முதுகுவலியுடன் தசைப்பிடிப்பு சேர்ந்தே வந்து நம்மை வாட்டி வதைக்கின்றது.

இதற்கு அடிக்கடி கண்ட கண்ட மருந்துகளை போடுவதை விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டே எளிய முறையில் இதனை குணப்படுத்த முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • தேங்காய் எண்ணெய் -அரை கப்
  • கோகோ பட்டர்- 1 கப்
  • புதினா எண்ணெய் -15 துளிகள்
  • கிராம்பு எண்ணெய் -8 துளிகள்
  • யூகளிப்டஸ் எண்ணெய் -15 துளிகள் உடல்
  • சோளமாவு -1 டீ ஸ்பூன்
  • இஞ்சித் தூள் -1 டீ ஸ்பூன்
செய்முறை

மேலே கூறியவற்றை ஒன்றாக கலக்கி, ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூசி, இதமாய் மசாஜ் செய்யவும். சில நிமிடங்களிலேயே வலி பறந்துவிடும்.

புதினா, யூகளிப்டஸ், கிராம்பு எண்ணெய், நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்து, புத்துணர்ச்சியை தருகிறது. தேங்காய் எண்ணெய் கோகோ பட்டர், எலும்புகளை பலப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கிராம்பு எண்ணெயில் வலியை மரக்கச் செய்யும் குணம் இருக்கிறது. இந்த எண்ணெய் வலி இருக்கும் இடங்களில் செயல்படுகிறது.

இஞ்சி உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுபடுத்தி, வலியினை குறைக்கிறது. சோள மாவு இதில் சேர்ப்பதற்கு காரணம், இந்த எண்ணெய்கள் சருமத்தில் எண்ணெய் பசையை அதிகப்படுத்து. இந்த மாவு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக் கொள்கிறது.

இந்த எண்ணெய் எலும்புகளுக்கு பலம் அளித்து, தசைகளுக்கு புத்துணர்வு தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் வலி குறைந்து புத்துணர்வையும் தருகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers