அதிக சிக்கன் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்துமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
241Shares

சிக்கன் என்றாலே பிடிக்காதவர் இந்த உலகத்தில் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

சிக்கன் சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் சிக்கனிலிருந்து கிடைக்கிறது.

இருப்பினும் தினமும் சிக்கன் சாப்பிடுவது தவறல்ல, ஆனால் சாப்பிடும் அளவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும் என கருதப்படுகின்றது.

சிக்கன் சாப்பிடும் அளவானது அவரவர் உடலமைப்பை பொறுத்து மாறுபடுவதாகும்.

ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரண ஆளாக இருந்து உங்களின் உடல் எடை 65 முதல் 75 கிலோக்குள் இருந்தால் நீங்கள் தினமும் 200 கிராம் சிக்கனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

100 கிராம் சிக்கனில் 124 கலோரிகளும், 20 கிராம் புரோட்டினும், 3 கிராம் கொழுப்பும் உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

இந்நிலையில் ஒருவர் வாரத்திற்கு மூன்று முறை தாராளமாக சிக்கன் சாப்பிடலாம் என சொல்லப்படுகின்றது.

மேலும் சிலருக்கு சிக்கன் சாப்பிடுவது அலர்ஜியை ஏற்படுத்தும் அவர்கள் சிக்கன் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

அதுமட்டுமின்றி சிக்கன் சாப்பிடுவதனால் பல நன்மைகளும் உடலுக்கு ஏற்படுகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

வேறு நன்மைகள்
  • சிக்கன் இருக்கும் புரோட்டின் உடல் கட்டமைப்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவுவதோடு நம் உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.
  • சிக்கனில் இருக்கும் டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உங்கள் மூளையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோனான செரோடோனின் அளவை அதிகரிப்பதால் உங்கள் மனநிலையை எளிதில் மாற்றிவிடும்.
  • சிக்கனில் செலீனியம் என்னும் பொருள் அதிகமுள்ளதால் இது மிகவும் வலிமையான ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும் இருப்பதனால் வீக்கம், கார்டியோ பிரச்சினை மற்றும் நரம்பியல் கோளாறுகளை குணப்படுத்துவதோடு இது செல்களை சிதைவடைவதில் இருந்து பாதுகாக்கிறது.
  • சிக்கனில் வைட்டமின் பி3 அதிகமுள்ளது மேலும் இது கார்போஹைட்ரேட்டை ஆற்றலாக மாற்றக்கூடியதாகும். இதனால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுவதால் இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
  • வைட்டமின் பி6 அதிகமிருப்பதால் சிக்கன் உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடும், மேலும் இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்