இந்த அல்வாவை தினம் 1 ஸ்பூன் சாப்பிடுங்க... ஒல்லியா இருக்கவங்க சீக்கரம் குண்டாகிடுவீங்களாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடை அதிகமானோர் அதனை குறைப்பதற்காக பெரும்பாடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள். அதை போன்று தான் உடல் எடை குறைவானவர்களும் அதனை கூட்டுவதற்காவும் ஒருபக்கம் உழைத்து கொண்டு இருக்கின்றார்கள்.

அதிலும் ஒரு சிலர் என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என்று கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

அந்தவகையில் உடல் எடையை அதிகரிக்க சில இயற்கை வழிமுறைகளும் உள்ளன.

தற்போது அந்த இயற்கை வழிகளில் ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • வெள்ளை பூசணிக்காய் - 1 சிறிய துண்டு
  • வெல்லம் - 100கிராம்
  • உலர்ந்த திராட்சை - 1 கைப்பிடி
  • நெய் - தேவையான அளவு
செய்முறை

வெல்லத்தை பாகு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை தோல் மற்றும் விதைகள் நீக்கி அறிந்து பசை ஆக்கி கொள்ளவும். உளர் திராட்சையை நீரில் ஊறவைத்து அதையும் பசை ஆக்கி கொள்ளவும்.

வெல்ல பாகில் அரைத்த பூசணிக்காயையும் திராட்சையையும் கலந்து வேக வைக்கவும். அதனுடன் நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்தில் இறக்கவும்.

ஒல்லியாக இருப்பவர்கள் சோர்வாக காணப்படுவார்கள். அவர்கள் முகம் ஒட்டியது போல் இருக்கும். இந்த அல்வாவை தினம் 1 ஸ்பூன் சாப்பிடும் போது முகம் பொலிவு பெற்று சோர்வு நீங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்