மலச்சிக்கலால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பலர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்.

இது உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இது சிலருக்கு அதிக வலியினை ஏற்படுத்தி விடுகின்றது.

இதற்கு மாத்திரை மருந்துகளை தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை இயற்கை உணவுகள் மூலமும் குணப்படுத்த முடியும்.

அந்தவகையில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுவிக்கும் உணவுகள் சில உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

 • தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.
 • காபி அல்லது டீ போன்றவற்றை சூடாக குடியுங்கள். பானங்களை சூடாக குடிக்கும் போது, அது குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.
 • கடுமையான மலச்சிக்கலால் கஷ்டப்பட்டு வந்தால், ஆப்ரிகாட் பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.
 • வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால், அது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளித்து, மலத்தை வெளியேற்ற உதவும்.
 • ப்ளூபெர்ரியிலும் டயட்டரி நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது மலச்சிக்கலுக்கான அறிகுறிகளைப் போக்கி, மலத்தை எளிதில் வெளியேற்றும்.
 • மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.
 • 2-4 டீஸ்பூன் எப்சம் உப்பை 8 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் குடலில் நீரின் அளவை அதிகரிக்கும். இதனால் மலம் இறுக்கமடையாமல் இளகி, எளிதில் வெளியேறும்.
 • 10 திராட்சை பழத்தில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதை தினமும் சிறிது சாப்பிட்டு, மலச்சிக்கல் வராமல் தடுத்திடுங்கள்.
 • பப்பாளிமாஸ் பழத்தில் உள்ள மலமிளக்கும் பண்புகள், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுவதோடு, மலத்தை உடனே வெளியேற்றும்.
 • கிவி பழத்தில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதுவும் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
 • இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இரவு நேரத்தில் இந்த எலுமிச்சை ஜூஸ் மலத்தை இளகச் செய்து, காலையில் எழுந்ததும் உடனே வெளியேற்றச் செய்யும்.
 • மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடித்தால், அதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலத்தை இளகச் செய்து எளிதில் வெளியேற்றும்.
 • ஆரஞ்சு பழத்தை தினமும் ஒன்று சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
 • தினமும் காலையில் ஓட்ஸை உணவாக உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
 • ஆலிவ் ஆயிலில் உள்ள கொழுப்புக்கள், குடலின் உட்பகுதியை மென்மையாக்கி, மலத்தை குடலின் வழியே எளிதில் நகர்த்தும்.
 • உலர்ந்த முந்திரிப்பழத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
 • ஒருவர் திணையை காலை உணவாக உட்கொண்டால், அது மலச்சிக்கல் தொல்லையில் இருந்து விடுவித்து, மலத்தை எளிதாக வெளியேற்ற செய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்