மாதவிடாய் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம் மாதவிடாய் என அழைப்படுகின்றது.

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள்.

இதன் போது வலி அதிகமாக காணப்படும். இதனை தடுக்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தினமும் காலை அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். மற்றும் வயிறு உபாதைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வளிக்கும்.
  • அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்னையில் இருந்து நல்ல தீர்வுக் கிடைக்கும்.
  • எள்ளைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து. மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் பிரச்சனைகள் குறையும்.
  • கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
  • செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
  • சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால், மாதவிலக்குப் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.
  • கற்றாழையின் ஜெல்லை நன்றாக கழுவி 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுப்பொடியை கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டால் மாதவிடாயின் போது வரும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்