தினமும் இதை 2 டீஸ்பூன் சாப்பிடுங்க... முழங்கால் மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை புதுப்பிக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று வயது முதிர்ந்தவர்கள் பெரும்பாலும் முழங்கால் மற்றும் மூட்டு வலிகளினால் பெரிதும் அவதிப்படுவதுண்டு.

இதற்கு மாத்திரை மருந்துகளுக்கு பதிலாக வீட்டு பொருட்களால் செய்யப்படும் ஓர் அற்புத மருந்து ஒன்று உள்ளது.

இந்த அற்புத மருந்து முழங்கால் மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை சீராக்கவும், எலும்புகளின் அமைப்பை மேம்படுத்தவும், மூட்டுகளில் உள்ள தசைநார்களை வலிமையாக்கவும் உதவி புரிகின்றது.

மேலும் இந்த அற்புத மருந்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்
  • ஜெலட்டின் - 2 டேபிள் ஸ்பூன்
  • ஆளி விதை - 8 டீஸ்பூன்
  • எள் - 4 டேபிள் ஸ்பூன்
  • பூசணி விதை - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 200 கிராம்
செய்முறை

ஒரு பெரிய கோப்பையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதனை ஒரு கண்ணாடி கோப்பையில் போட்டு சேகரித்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டீஸ்பூன் மற்றும் மதிய உணவிற்கு முன் ஒரு டீஸ்பூன் என சாப்பிட வேண்டும்.

இந்த சிகிச்சையை மேற்கொண்டால், நம் எலும்புகளை இணைக்கும் மூட்டுப் பகுதியில் உள்ள தசைநார்களின் நெகிழ்வுத்தன்மை மேம்படும் மற்றும் எலும்புகளும், மூட்டுக்களும் வலிமையடையும்.

அதுமட்டுமின்றி, இது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடல் எடையையும் குறைக்க உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers