சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இதோ எளிய பாட்டி வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
1127Shares

இன்று உயிரை மெல்ல மெல்ல கொல்லும் நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும்.

45 வயதைத் தாண்டுவது, அதிக உடல் எடை (குறிப்பாக இடுப்பைச் சுற்றி), பரம்பரையாக இந்நோய் இருப்பது, அதிக ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவை இந்நோய்க்கான சில காரணங்களாக இருக்கின்றன.

இதில் இருந்து விடுபட நம்முன்னோர்கள் கையாண்டு வந்த சில பாட்டி வைத்திய முறைகளை பார்ப்போம்.

  • வில்வ இலையை பொடி செய்து, காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க, சர்க்கரை நோய் குறையும்.
  • ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, தினமும் சிறிதளவு சாப்பிட்டு, தண்ணீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
  • தினமும் ஒரு கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் மெலிதல், நீரிழிவு நோய், போன்ற சர்க்கரை நோய் சம்மந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும்.
  • தொட்டாற் சுருங்கியின் இலை, வேர் இரண்டையும் காய வைத்து, பொடி செய்து, பாலில் கலந்து காலை நேரத்தில் குடிக்க, சர்க்கரை நோய் குறையும்.
  • சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து, தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
  • வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல் கொட்டை பொடி நான்கையும் சேர்த்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய் குறையும்.
  • ஆவாரம் பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் இவை மூன்றையும் சேர்த்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
  • தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு, சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் அலர்ஜி சம்மந்தமான வியாதிகள் குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்