கேழ்வரகை சாப்பிடுவதனால் இவ்வளவு மருத்துவ பயனா? பல நோய்களை விரட்டுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு ஆகும். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது ஏராளமான மருத்துவகுணங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும் தன்மை கொண்டது.

அதுமட்டுமின்றி கேழ்வரகில் பாலில் உள்ள கால்சியத்தின் அளவை விட இதில் அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகின்றது.

மேலும் இதன் மருத்துப்பயன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • குடற்புண் உள்ளவர்கள் தினமும் கேழ்வரகை கூழ் செய்து சாப்பிட்டால் குடற் புண் குணமாகும். குடலுக்கு வலிமை அளிக்கும். உடல் உஷ்ணத்தை சமநிலையில் பாதுகாக்க உதவுகிறது.
  • மாதவிடாய் பிரச்சனை கருப்பைக்கு கெடுதலை உண்டாக்கும். இந்த கோளாறு சரியாக பெண்கள் இந்த கேழ்வரகு கூழை சாப்பிட்டுவர சரியாகும்.
  • உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் கேழ்வரகு கூழை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கிறது.
  • சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டு செய்து சாப்பிடலாம். இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறைந்து விடும்.
  • கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது இதில் அதிகளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளது. கர்ப்பிணி பெண்கள் தினமும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
  • கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்