மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது ஆகும்.

தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுத்து விடுகின்றது.

மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நிரந்தரமாகக் குணப்படுத்தலாம். இப்போது மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கின்றன. இருப்பினும் இது நிரந்த தீர்வை தராது.

இதற்கு நமது வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை இங்கு பார்ப்போம்.

 • அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

 • தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலை விரட்டலாம்.

 • கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும்.

 • எலுமிச்சை சாறு 5 மி.லி உடன் ஒரு சிட்டிகை உப்பு, 300 மி.லி வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும். உடல் உற்சாகம் பெரும்.

 • எள் விதையைப் பொடி செய்து பனை வெல்லத்துடன் கலந்து 4 முதல் 6 தேக்கரண்டி அளவிற்கு தினமும் உண்டுவர மலச்சிக்கல் தீரும்.

 • மோருடன் இஞ்சி, கல்உப்பு, பெருங்காயம் கலந்து உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.

 • தினமும் இருவேளை செம்பருத்தி இலைகளை தூள் செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

 • இரவு வேளைகளில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும்.

 • குடல், இரத்தம் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி மலச்சிக்கலையும் போக்கும்.

 • உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.

 • மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

 • வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கிசாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

 • நிறைய பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல மருந்து.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்