வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற வேண்டுமா? இதோ சில எளிய பாட்டி வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்பிலிருந்து கசிவதாகும்

வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது.

இதிலிருந்து எளிதில் விடுபட சில பாட்டி வைத்திய முறைகளை இங்கு பாரப்போம்.

  • உளுந்து, பார்லி இரண்டிலும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம்.

  • சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும்.

  • சுத்தம் செய்யப்பட்ட ஆகாயக் கருடன் கிழங்கு, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில் இரண்டு கிராம் அளவுக்கு வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம்.

  • அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் ஆகியவற்றில் தலா 20 கிராம் எடுத்து தட்டிச் சாறு பிழிந்து அதில் படிகார பஸ்பம் ஒரு கிராம் கலந்து குடிக்கலாம்.

  • சிவப்பு நிற தண்டுக் கீரைத் தண்டுடன் துத்தி இலையை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.

  • கீழா நெல்லி இலை, கோவை இலை, அசோகமரப்பட்டை, நாவல்பட்டை அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மோரில் கலந்து குடிக்கலாம்.

  • சாணாக்கி கீரையுடன், சீரகம் சிறிதளவு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.

  • அருகம்புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

  • எலிக்காதிலையுடன் கடுக்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.

  • அருகம்புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்