வாய் துர்நாற்ற பிரச்சனையா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சினைகள் ஒன்று தான் வாய் துர்நாற்றம்.இதனால் மற்றவர்கள் நம் அருகில் வரவே பயப்படுவார்கள்.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது, புகைப்பிடித்தல் மற்றும் வெற்றிலை பாக்கு போடுவது என பலவித காரணங்களால் வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுகிறது.

இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும்.

  • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை மென்று வாயில் அடக்குவது போல கிராம்பையும் மென்று வாயில் அடக்கிக்கொண்டால் வாய் துர்நாற்றம் விலகும்.
  • சிறிதளவு நீரில் புதினா சாறு (Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) இரண்டையும் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • வாய் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வாயிலிட்டு கொப்பளிக்க வேண்டும்.
  • வெண்டைக் காய் பச்சடி மற்றும் வெண்டைக் காய் சேர்த்த மோர் குழம்பையும் வாரத்தில் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெண்டைக் காய்களில் உள்ள நார்ப் பொருள்கள் கொழுப்பை கரைப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றி விடுவதால் வாய் நாற்றம் நிரந்தரமாகவே அகன்று விடும்.
  • கொத்தமல்லிக் கீரையை நன்கு கழுவி சாறாக்கி தொடர்ந்து அருந்தினால் காய்ச்சல் நேரத்தில் உடல் குளிர்ச்சியைப் பெறும். வாய் நாற்றமும் அகலும். கொத்தமல்லிக் காபி அருந்தினாலும் வாய் நாற்றம் அகன்று விடும்.
  • எலுமிச்சை சாறு, பட்டை பொடி, சோடா உப்பு மற்றும் தேனுடன் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு குலுக்க வேண்டும். இந்ந நீரை பயன்படுத்தி தினமும் சிலமுறை வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் முழுதும் நீங்கும்.
  • ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்க புத்தணர்ச்சி ஏற்படும். ஏலக்காயை தேநீரில் கலந்தும் குடித்துவரலாம்.
  • வாய் துர்நாற்றத்திற்கு பேக்கிங் சோடா சிறந்த வைத்தியமாக இருக்கிறது. வெந்நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து வாய் கொப்பளித்து வந்தால், வாயின் அமிலத்ததன்மையில் மாற்றம் ஏற்பட்டு, துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் ஓடிவிடும்.
  • உணவருந்திய பின்னர் சூரியகாந்தி விதைகளை மென்று பின்னர் ஒரு டம்ளர் நீர் அருந்தினால் வாய் துர்நாற்றம் ஓடோடிவிடும்.
  • தினமும் அன்னாசிப்பழ சாறு அருந்தி வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்