ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சிவப்பு வெங்காயம்.. எப்படினு தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெரியவர்கள் முதல் சிறுவர்களுக்கு வரை வரும் ஆஸ்துமாவை சரிசெய்வதில் சிவப்பு வெங்காயம் சிறந்தது என்று சொல்லப்படுகின்றது

ஏனெனில் சிவப்பு வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட், க்யூயர்சிடின், ஆந்தோசையனின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை சரி செய்யும் வல்லமை படைத்தது.

சிவப்பு வெங்காயத்தில் வைட்டமின் சி, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் அடங்கியுள்ளன.

இப்போது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட சிவப்பு வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்
  • சிவப்பு வெங்காயம் - 1/2 கிலோ
  • தேன் - 6-8 டேபிள் ஸ்பூன்
  • நாட்டுச்சர்க்கரை - 300-350 கிராம்
  • எலுமிச்சை - 2
  • தண்ணீர் - 5-6 டம்ளர்
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து உருக வைக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட வேண்டும்.

அடுத்து அதில் நீர் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீர் கொதித்து நன்கு சுண்டிய நிலையில், அடுப்பை அணைத்து கலவையை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் அதில் எலுமிச்சைகளைப் பிழித்து, தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் போட்டுக் கொள்ளுங்கள்.

பெரியவர்களுக்கு ஆஸ்துமா என்றால், ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு என்றால் 1 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்