தினமும் நைட் தூங்கும் முன் இந்த பானத்தை குடிங்க... நன்மைகள் ஏராளமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தொப்பை பிரச்சினை. இதனால் பலரும் தாங்கள் ஆசைப்பட்டதை சாப்பிட முடியாமல், ஆசைப்பட்ட ஆடைகளை அணிய முடியமால் கஷ்டப்படுவதுண்டு.

இதற்காக கடின உடற்பயிற்சிகளை தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

இதற்கு ஆயுர்வேதத்தில் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தேன் உடல் எடையினை குறைக்க உதவி புரிகின்றது.

அதில் உள்ள உட்பொருட்கள் உடல் எடையைக் குறைக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்து விளங்குகின்றது.

தற்போது தேனில் தயாரிக்கப்படும் அற்புத பானத்தை கொண்டு எப்படி உடல் எடையினை குறைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பட்டைத் தூள் - 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் - 200 மிலி
  • தேன் - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை

200 மிலி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும்.

பின் அடுப்பை அணைத்து அந்த நீரை இறக்கி, அதில் பட்டைத் தூளை சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு அதில் தேன் சேர்த்து கலந்து, நீர் குளிர்ந்த பின் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

தயாரித்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் குடியுங்கள். இந்த சக்தி வாய்ந்த பானம் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள், கழிவுகள் போன்றவற்றையும் வெளியேற்றும்.

அதோடு, உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும்.

இந்த பானத்தை இரவில் குடித்தால் தான், அது உடலினுள் நன்கு வேலை செய்து மாற்றத்தை விரைவில் காண்பிக்கும்.

குறிப்பு - இந்த பானம் குடித்த பின் வேறு எந்த ஒரு உணவுப் பொருளையோ அல்லது பானத்தையோ உட்கொள்ளக் கூடாது. மேலும் இந்த பானத்தை பகல் நேரத்திலும் குடிக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்