தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க.... ஐந்தே நாட்களில் 3 கிலோ வரை எடை குறையுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க எவ்வளவே வழிகளில் இருந்தாலும் இயற்கை முறையில் எடையை குறைப்பதே சிறந்ததாகும்.

துளசியைப் போன்று மருத்துவ குணம் வாய்ந்தது தான் பார்ஸ்லி.

சித்த மருத்துவத்தில் பார்ஸ்லி இலைக்கு தனியிடமே உள்ளது.

பார்ஸ்லியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதோடு, வைட்டமின் சி, கே மற்றும் ஈ போன்றவையும் ஏராளமாக நிறைந்துள்ளது.

இது உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.

இதுமட்டுமின்றி இதில் ஜூஸ் போட்டு குடிப்பதனால் உடல் எடை மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தற்போது அந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • 1 கட்டு பார்ஸ்லி
  • 1 எலுமிச்சை
  • 1 கப் தண்ணீர்
செய்முறை

முதலில் பார்ஸ்லியை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, 1 கப் தண்ணீர் ஊற்றி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

வெறும் 5 நாட்கள் மட்டும் குடிக்க வேண்டும். பின் 10 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 5 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

வேறு நன்மைகள்
  • பார்ஸ்லியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும்.
  • இதில் உள்ள நேயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இதனை உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம்.
  • சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்க வேண்டுமானால், பார்ஸ்லியை உணவில் சேர்ப்பது நல்லது.
  • கர்ப்பிணிகள் பார்ஸ்லியை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அது மாதவிடாயைத் தூண்டி, கருவை கலைத்துவிடும்.
  • குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பார்ஸ்லியை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்