தோள்பட்டை வலியா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய நவீன உலகில் வேலைப்பளு காரணமாக ஏராளமான நோய்களை எளிதில் நம்மை வந்து சேர்ந்துவிடுகின்றது. அதில் தோள்பட்டை வலி மிக முக்கியமானது ஆகும்.

கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு தோள்பட்டை வலி அடிக்கடி வரும்.

தோள்பட்டையில் விறைப்பு, தோள்களை அசைப்பதில் சிரமம், தோள்பட்டைப் பகுதிகளில் வீக்கம், தோள்பட்டையில் விட்டுவிட்டு வலியை உணர்தல் போன்றவை இதற்காக முக்கிய அறிகுறிகளாகும்.

இதற்கு நாம் மருந்து கடைகளுக்கு தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கை முறையில் கூட போக்க முடியும் தற்போது அவற்றை பார்ப்போம்.

  • ஒரு பாலிதீன் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும். பின் அதனை கொண்டு வலியுள்ள தோள்பட்டையில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை நேரடியாக தோள்பட்டையில் வைக்க வேண்டாம். இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருவேளை ஐஸ் கட்டிகள் இல்லாவிட்டால், உறைய வைத்த காய்கறிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு லேசாக வறுத்து சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் போட்டு, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர, தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • எலுமிச்சையை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பின் ஒரு பாதியை மட்டும் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து, அதனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். இந்த பானத்தை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, தோள்பட்டை வலி குறைந்திப்பதைக் காணலாம்.
  • 2-3 கப் எப்சம் கல் உப்பை, மஸ்லின் துணியில் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த மூட்டையை வெதுவெதுப்பான நீர் நிரப்பிய குளியல் டப்பில் போட்டு, அதனுள் தோள்பட்டை மூழ்கும் வரை 30 நிமிடம் உட்காருங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், தோள்பட்டை வலியில் இருந்து விடுபடலாம்.
  • 1-2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை வலியுள்ள தோள்பட்டையில் தடவ வேண்டும். இப்படி வலி போகும் வரை தொடர்ந்து செய்து வாருங்கள்.
  • 2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை வலியுள்ள தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். மாற்று வழியாக, ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடிக்கலாம்.
  • சிறு துண்டு இஞ்சியை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீரை ஊற்றி கொதித்ததும் இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் துருவிய இஞ்சியைப் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, 2 டீஸ்பூன் தேன் கலந்து சூடாக இருக்கும் போதே குடிக்க வேண்டும். இந்த பானத்தை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
  • டீஸ்பூன் யூகலிப்டஸ் ஆயிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை வலியுள்ள தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
தோள்பட்டை மசாஜ்

முதலில் ஒரு பாத்திரத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, அதில் சிறிது கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் அந்த எண்ணெயை வலியுள்ள தோள்பட்டை பகுதியில் தடவி, வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யுங்கள்.

இப்படி இந்த செயலை தொடர்ந்து வலி போகும் வரை செய்யுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்