பெண்களே இந்த பகுதியில் அரிப்பா? வினிகரை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக யோனி பகுதியில் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.

இது நோய்த்தொற்று, உடலுறவு மூலம் பரவும் நோய்கள், நாப்கின், அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல், உடல் பருமன் போன்றவற்றால் அரிப்பு உண்டாகிறது.

கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல்.

இதற்கு கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிக்கமால் இதை ஆப்பிள் சிடார் வினிகர் வைத்து சரி செய்யலாம்.

ஏனெனில் இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அரிப்பை ஏற்படுத்தும் தொற்றுக் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது. இது யோனி சரும பகுதி pH அளவை சமநிலையில் வைக்கிறது.

இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்,குடலில் மற்றும் யோனி பகுதியில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்தல் போன்ற செயல்கள் மூலம் அரிப்பை போக்குகிறது.

  • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அந்த நீரைக் கொண்டு தினமும் யோனி பகுதியை அலசி வாருங்கள்.
  • 2 கப் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு டப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அந்த டப்பில் 15 நிமிடங்கள் காலை மடக்கி உட்கார்ந்து இருங்கள். இப்படி தினமு‌ம் யோனி பகுதியை ஆப்பிள் சிடார் வினிகர் கொண்டு அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டீ ஸ்பூன் தேன் மற்றும் -1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். இதை தினமும் இரண்டு தடவை குடித்து வாருங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்