மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட வேண்டுமா? இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்
264Shares

இன்று பெண்களை தாக்கும் முக்கிய நோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.

உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது,

மார்பக புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும்.

இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்.

சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.

தற்போது அவை என்ன என்ன உணவுகள் என்பதை பார்ப்போம்.

 • ப்ளூபெர்ரீஸ் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதற்கு புற்று நோயை உண்டாக்கும் அழற்சியை தடுத்து உடலை புற்று நோய் தாக்கத்தில் இருந்து காக்கிறது.
 • பிரேசில் நட்ஸில் செலினியம், நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அடங்கியுள்ளன. இவை நமது நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக ஏற்படும் அழற்சியை தடுத்து புற்று நோய் வளர விடாமல் தடுக்கிறது. இதை உங்கள் சாலட் உணவிலோ அல்லது தினசரி உணவிலோ சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.
 • காளான்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொண்டால் மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது மிகவும் சிறந்தது.
 • மாதுளையில் உள்ள பாலிபினோல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் வளருவதை தடுக்கிறது. மேலும் இரும்புச் சத்து உடலுக்கு கிடைப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது.
 • பச்சை இலை காய்கறிகளும் நமக்கு புற்று நோய் வருவதை தடுக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி, நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் குளோரோபைல் போன்றவை புற்று நோய் செல்களை உடைத்தெறிகிறது.
 • ப்ரோக்கோலி உள்ள சல்பரோபோன் மற்றும் இன்டோல்ஸ் வெவ்வேறு விதத்தில் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இவை மார்பக புற்று நோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்றவற்றை எதிர்த்து போரிடுகிறது.
 • பூண்டு மார்பக புற்று நோய் வருவதை தடுப்பதோடு புரோஸ்டேட் புற்று நோய், குடல் புற்று நோய் போன்றவற்றிலிருந்தும் நம்மை காக்கிறது. இதிலுள்ள அலுயியம் புற்று நோயை எதிர்க்கும் பொருள். எனவே தினமும் காலையில் பூண்டு பல் சாப்பிட்டாலே போதும் புற்று நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
 • வால்நட்ஸில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை புற்று நோய்க்கு எதிராக செயல்படுகிறது. எனவே தினமும் இந்த உணவை எடுத்துக் கொண்டால் புற்று நோயிலிருந்து தப்பிக்கலாம்.
 • சர்க்கரை வள்ளிக் கிழங்கு இதிலுள்ள பீட்டா கரோட்டீன் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதை 17 % வரை குறைக்கிறது. எனவே இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 • க்ரீன் டீயில் பாலிபினோல் என்ற பொருள் இருப்பதால் அவை நமது உடலுக்கு மிகவும் நல்லது. இவை மார்பக புற்று நோயை எதிர்த்து போரிடுகிறது. எனவே தினமும் பெண்கள் ஒரு கப் க்ரீன் டீ அருந்துவது நல்லது.
 • சிவப்பு மிளகாயில் உள்ள கேப்ஸைசின் மார்பக புற்று நோய் வளர்வதை எதிர்த்து போரிடுகிறது. அதே போல பச்சை மிளகாயில் உள்ள குளோரோபைல் மார்பக புற்று நோய் வர விடாமல் தடுக்க காவலாக அமைகிறது. எனவே உங்கள் உணவில் இவைகளையும் சேர்த்து பலன் பெறுங்கள்.
 • மஞ்சள் தூளில் குர்குமின் பொருள் குடல் புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய், சரும புற்று நோய் இவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே உங்கள் உணவில் கொஞ்சம் மஞ்சளை சேர்த்தாலே போதும் எல்லா வகையான புற்று நோய் களையும் விரட்டி விடலாம்.
 • முட்டையில் உள்ள கொலைன் என்ற பொருள் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை வர விடாமல் தடுக்கிறது. எனவே பெண்கள் தினசரி உணவில் முட்டையை சேர்த்து கொள்வதன் மூலம் புற்று நோய் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளலாம்.
 • ஆளி விதைகளை உங்கள் சாலட் உணவிலோ அல்லது குக்கீஸ், மவ்வின்ஸ் போன்றவற்றிலோ சேர்த்து உண்ணுவது நல்லது. இதிலுள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து மார்பக புற்று நோய் செல்களை அழிக்கிறது.
 • தினசரி உணவில் கேரட்டை சேர்த்து கொள்வதன் மூலம் 18 முதல் 28 சதவீதம் வரை மார்பக புற்று நோயை தடுக்கலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது.
 • செர்ரி பழங்கள் தினசரி உணவிலோ அல்லது ஸ்மூத்தியாக எடுக்கும் போது மார்பக புற்று நோய் தாக்கத்தில் இருந்து நம் உடலை காத்து கொள்ளலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்