காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படுமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய அவசர உலகில் பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நம்மில் சிலர் வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தம் மற்றும் பணிக்காக நீண்டதூரம் செல்வதால் சாப்பிடுவதற்கான நேரம் குறைவு போன்ற காரணங்களால் காலை உணவு சாப்பிடுவதை குறைத்துக் கொள்கின்றனர்.

காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவே மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்து நீரிழிவு நோய் உருவாக்கிவிடுகின்றது.

நீரிழிவு பரம்பரை நோயாக கருதப்பட்டாலும் தற்போது உணவு பழக்க வழக்கம் மூலமும் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வுவொன்று 1 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. அதில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர்.

அதில் வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

அத்துடன் காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காலை உணவை தவிர்ப்பதே காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

மேலும் தற்போது இந்தியாவில் மக்கள் தொகையில் 8.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 20 முதல் 70 வயது உள்ளவர்கள் அடங்குவர் எனவும் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்க அனைவரும் தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers