மூட்டு வலியை போக்க வேண்டுமா? இதை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது.

30 வயதை தாண்டினால் நம்மை நடக்க விடமால் மூட்டு வலி முடக்கிவிடுகின்றது.

50 சதவீதத்திற்கும் மேல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு காரணம் உடல் பருமன் தான்.

மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

இதற்கு சிறந்த நிவாரணியாக வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • கல் உப்பு - 1 கப்
  • நல்லெண்ணெய் - 1 கப்

தயாரிக்கும் முறை

முதலில் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து அதில் கல் உப்பைப் போட்டு ஒரு மரக் கரண்டியால் நன்றாக கலக்குங்கள். உப்பும் எண்ணெயும் நன்றாக சேர வேண்டும்.

பின்னர் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இறுக்கமாக மூடி வைத்திடுங்கள். 8 நாட்களுக்கு அதிகம் வெளிச்சமில்லாத இடத்தில் வைத்திடுங்கள்.

இந்த எண்ணெயை 8 நாட்களுக்கு பின் தேவையான அளவு எடுத்து லேசாக சூடு பண்ணி, மூட்டுப் பகுதியில் தேயுங்கள்.

லேசாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் தர வேண்டும்.

இவ்வாறு செய்யவதனால் மூட்டு வலி நாளடைவில் குறைந்து கொண்டே செல்லும்.

மூட்டு வலியுள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • சோள எண்ணெயில் அதிக ஒமேகா 3 அமிலம் இருப்பதால் அவை மூட்டு வலியை இன்னும் அதிகரிக்கச் செய்திடும். ஆகவே சோள எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

  • தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளதால் தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

  • சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும். ஏனவே சக்கரை தவிர்ப்பது நல்லது

  • கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்