தேனை நீரில் கலந்து குடித்தால் இவ்வளவு ஆபத்தா? ஆயுர்வேதம் கூறும் திடுக்கிடும் தகவல்

Report Print Kavitha in ஆரோக்கியம்

சித்த வைத்தியம் முதல் ஆயுர்வேதம் வரை தேன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தேனில் எண்ணற்ற மருத்துவபயன்கள் நிறைந்துள்ளது. இது அனைவரும் அறிந்த தகவல் ஒன்றே.

அந்தவகையில் தேனை சில உணவுகளில் சேர்த்து சாப்பிடுவதனால் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கின்றது.

தற்போது தேனுடன் எந்தெந்த உணவுகள் கலந்து சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ளுவோம்.

  • எப்போதுமே தேனில் நெய்யை கலந்து சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் உடல்நல கோளாறுகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும் .

  • தேனை சூடான பாலில் என்றுமே கலந்து சாப்பிட கூடாது. அவ்வாறு கலந்து சாப்பிட்டால் தேன் அதன் வெப்பநிலையை தாங்காமல் நச்சு தன்மையுடன் மாறுகிறது.

  • முள்ளங்கியில் அதிக சுவை சேர்வதற்காக ஒரு போதும் தேனை கலந்து சாப்பிட்டுவதனால் தேனும் முள்ளங்கியும் சேர்ந்தால் விஷய தன்மையாக மாறி விடுமாம்.

  • சுடு நீரில் தேன் கலந்து குடிப்பதால் அவற்றின் தன்மை திரிந்து விஷமாக மாறி விடும் என்று சொல்லப்படுகின்றது.

  • தேனை 140 டிகிரி வெப்பத்திற்கு மேல் சூடு செய்தால், தேன் விஷமாக மாறி விடும்.

  • அசைவம் சாப்பிட்ட பிறகு செரிமானம் சரியாக ஆகவில்லை என்றால், அதற்கு ஒரு போதும் தேனை சாப்பிட்டு விடாதீர்கள். இவை மேலும், வயிற்று கோளாறை அதிகரித்து உபாதைகளை தரும். இனி மேலும் சில தவறான கலவை உணவுகளை பார்ப்போம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்