வாயில் வரும் வெண்புண்களை சரிசெய்ய வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெள்ளை படலம் போல் திட்டுக்களானது வாயின் உட்பகுதியில் ஏற்படுவதே வாய் வெண்புண் ஆகும். இது வெண்புண் கேண்டிடா ஆல்பிக்கென்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது.

இது பெரும்பாலும் குழந்தைகளை விட பெரியவர்களை தான் தாக்குகின்றது. அவர்கள் அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டால் பாக்டீரியாவை கொன்று இந்த வெண்படலம் உருவாகிறது.

இதை வீட்டில் கிடைக்கும் சில பொருட்கயை கொண்டு எளிய முறையில் போக்க முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, வாயை கொப்பளித்து வந்தால், வாயில் உள்ள பூஞ்சையின் வளர்ப்பை கட்டுப்படுத்த முடியும். அதிலும் இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்வது நல்லது.
  • ஒரு கப் தண்ணீரில் கால் டீஸ்பூன் போரிக் அமிலம் கலந்து மூன்று அல்லது நான்கு முறையாவது வாயை கழுவினால் இதை நீக்க முடியும். இதை பயன்படுத்தும் போது கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த கலவையை விழுங்கி விட்டால், அது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை கொண்டுவரும்.
  • இரண்டு பூண்டு பற்களை எடுத்து நன்கு மசித்து பின்னர் அதை விழுங்கியோ அல்லது பூஞ்சை உள்ள இடங்களில் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து பின்னர் விழுங்குவதோ நல்லது. இவை பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும்.
  • தயிரை அதை இரண்டு ஸ்பூன் எடுத்து உண்பது வீக்கத்தையும் புண்களையும் குறைக்கும். இதை சுட வைக்காத பால் மூலம் செய்வார்கள்.
  • காய்ச்சாத பாலால் செய்யப்பட்ட தயிரை நீங்கள் குடிக்க விரும்பாவிட்டால், அசிடோபில்லஸ் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இவை பாக்டீரியாவை கட்டுப்படுத்த உதவும். இரண்டு அசிடோபில்லஸ் மாத்திரையை எடுத்து அதை உடைத்து ஆரெஞ்சு சாற்றுடன் கலந்து குடிக்கலாம்.
  • லாவெண்டர் எண்ணெய், இலவங்க எண்ணெய், டீ மர எண்ணெய்களில் தொற்றுகளை தடுக்கும் சக்தி உள்ளது. இந்த எண்ணெயை நாம் பயன்படுத்தும் பற்பசையில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விட்டு பற்களை துலக்கினால் பற்பசையும் எண்ணெய்யும் கலந்து வாய் முழுவதும் பரவி பின்னர் கழுவும் போது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • வெது வெதுப்பான தண்ணீரில் லாவெண்டர் எண்ணெயை தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டு வாயை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொப்பளித்தாலும், இந்த படலத்தை நீக்க முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers