தினமும் தூக்கமின்மை பிரச்சினையால் அவதியா? அப்ப இத நாக்குக்கு அடில வையுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய நவீன உலகத்தில் நமக்கு தூக்கம் என்பது முக்கியமானதாகும். இதில் சிலர் அன்றாடம் தூக்கிமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டுள்ளனர்.

இதற்காக நம்மில் சிலர் நல்லா தூக்கம் வரவேண்டும் என்று நினைத்து மருத்துவரை கூட பரிந்துரைக்கமால் தூக்க மாத்திரைகளை குடிப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இது நாளாடைவில் உடலுக்கு கெடு விளைவிக்கின்றது. அதற்கு நமது வீட்டில் உள்ள சமையலறை பொருட்களை கெண்டு தூக்கமின்மை பிரச்சினையை விரட்ட முடியும்.

உப்பு மற்றும் சர்க்கரை இந்த இரண்டு பொருட்களுமே உடல் மற்றும் மெட்டபாலிசத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

இந்த பொருட்கள் உடலுக்கு தேவையான க்ளுக்கோஸ் மற்றும் சோடியத்தை சீரான அளவில் பராமரிக்கின்றது.

இவை மன அழுத்த ஹார்மோன்களை சீராக்கி, செல்களுக்கு ஆற்றலை வழங்குகின்றன.

இப்போது உப்பு மற்றும் சர்க்கரையை எப்படி எடுத்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று காண்போம்.

தேவையான பொருட்கள்
  • பிங்க் நிற இமாலய கல் உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 5 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை

ஒரு பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்க வேண்டும்.

இப்படி குலுக்குவதால், அந்த அனைத்து பொருட்களும் ஒன்று சேர்ந்து, ஒரு ஒருபடித்தான கலவை கிடைக்கும்.

இந்த கலவையைக் கொண்டு தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.

வேறு நன்மைகள்
  • லோ பிபி உள்ளவர்கள், அடிக்கடி மயக்க உணர்வைப் பெறுவார்கள். ஆனால் உணவில் சாதாரண உப்பிற்கு பதிலாக, இமாலய கல் உப்பைப் பயன்படுத்தினால், தாழ் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • இமாலய கல் உப்பில் உள்ள சத்துக்கள், செரிமான பாதையில் செல்லும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும். இதன் விளைவாக உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகும்.
  • இமாலய கல் உப்பில் உள்ள பல்வேறு கனிமச்சத்துக்கள், எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு, இணைப்புத்திசுக்களையும் வலிமையாக்கும். இதனால் ஆர்த்ரிடிஸ், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
  • இது உடலில் உள்ள டாக்ஸின்களை நீங்குவதோடு, கொழுப்பு செல்களையும் தான் கரைத்து வெளியேற்றும். இதன் மூலம் இது உடல் எடையைக் குறைக்கச் செய்யும் சிறப்பான பொருளாகவும் கருதப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்