அடிக்கடி பல் கூச்சத்தினால் அவதியா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் பலரும் வாழ்வில் ஒரு நாளாவது பல் கூச்சத்தை சந்தித்திருப்போம். நாம் அடிக்கடி விரும்பி உண்ணும் சாக்லெட், ஐஸ்கிறீம், குளிர்பானங்கள் போன்றவை சாப்பிடும் போது பல் கூச்சம் உடனடியாக தாக்கி விடுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும்.

இந்த கூழ், பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு, புளிப்பு போன்ற உணர்ச்சிகள் பல மடங்காக பெருகுவதனாலேயே வருகின்றது.

இதனை எளிய முறையில் எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணெயை கையளவு எடுத்து காலையில் பல் விளக்குவதற்கு முன் வாயில் ஊற்றி கொப்பளியுங்கள். வாயிற்குள் ஈறுகளுக்குள்ளே செல்லும்படி கொப்பளிக்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ஈறுகளில் ஏற்படும் பாதிப்பினை சரி செய்கிறது.
  • தினமும் காலை மாலை பல் விளக்கியதும், வெதுவெதுப்பான உப்பு நீரை வாயில், ஈறுகளில் படுமாறு 1 நிமிடம் வைத்திருந்து, பின் கொப்பளிக்கவும். கல் உப்பில் செய்வது நல்லது.
  • கிராம்பு எண்ணெயை ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் இருதடவை செய்யலாம்.
  • கொய்யா இலைகளில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இவை கிருமிகளை எதிர்த்து போராடும். ஈறுகளை பலப்படுத்தும். கூச்சம் கட்டுப்படும். தினமும் இரண்டு ஃப்ரஷான கொய்யா இலைகளை பற்களில் படுமாறு மெல்லுங்கள்.
  • ஹைட்ரஜன் பெராக்ஸைட்டை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் சம அளவு நீரை கலந்து வாயில் அரை நிமிடம் எல்லா இடங்களிலும் படுமாறு வைத்திருங்கள் அதன்பின்னர் அதனை கொப்பளித்துவிடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் சிதைவினை தடுக்கின்றது. பல் கூச்சத்தை குணப்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers