வியர்வை துர்நாற்றம் தாங்கவில்லையா? இதோ எளிய டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்கப்படும், இதனால் ஏற்படும் உடல் நாற்றம் நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது.

வியர்வையாக அதிகமாக சுரக்க இயற்கையாகவே நிகழும் ஹார்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை மாற்றி போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும்.

இதற்கு நம்மில் பலரும் டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் இது தற்காலிகமாக தான். இதனை இயற்கை வழிகளில் போக்க பலமுறைகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

 • குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
 • தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.
 • படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.
 • தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.
 • குளித்த பின், சிறிது பேக்கிங் சோடாவை அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
 • குளிப்பதற்கு முன்னாள் சுத்திகரிக்கப்படாத ஆப்பிள் சீடர் வினிகரை காட்டன் பஞ்சில் நனைத்து உங்கள் அக்குள்களில் தேய்க்கவும் இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
 • குளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
 • குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
 • ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் போது, இறுதியில் ஒரு கப் நீரில் கலந்து, அக்குளைக் கழுவினால், அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும்.
 • தக்காளி சாறும் உடல் துர்நாற்றத்தை தடுக்கும். அதற்கு ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
 • 8 டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலந்து, ஒரு நாளைக்கு பல முறை துர்நாற்றம் வரும் இடத்தில் ஊற்றிக் கழுவி வந்தால், வியர்வையானது கட்டுப்படுவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.
 • குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்