சீரற்ற மாதவிடாயால் அவதிப்படும் பெண்களே! இதோ சிறந்த தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெண்களுக்கு அவர்களின் கருப்பையில் கருவுராத சினைமுட்டைகள் 28 நாட்களுக்கு ஒரு முறை வெளியேறுவது மாதவிடாய் அல்லது மாதவிலக்கு என்றழைக்கின்றனர்.

சிலருக்கு 30 நாட்களுக்குள் வருவதும் இயல்பே. இரண்டு மாதங்கள் மற்றும் அதற்கு மேலே மாதவிடாய் வராமல் இருப்பது சீரற்ற சுழற்சியை குறிக்கும்.

28 நாட்களுக்கு ஒரு முறை வருவதே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும்.

பெரும்பாலும் பெண்கள் இந்த சீரற்ற மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படுவதுண்டு.

துக்கமின்மை, மன அழுத்தம், உணவுமுறை,அதிக உடல் எடை போன்றவை முக்கியமான காரணியாக திகழ்கிறது.

இதற்கு ஆங்கில மருத்துவங்களை விட நம் முன்னோர்கள் காலங்காலமாக கடைப்பிடித்த நாட்டு மருத்துவங்கள் சிலவற்றை பார்ப்போம்.

  • இஞ்சி கலந்து செய்யப்படும் உணவுகளில் இஞ்சி துண்டுகளை நன்கு மென்று உண்ண வேண்டும்.
  • ஏலக்காய்கள் சிலவற்றை பச்சையாகவும் அல்லது பொடி செய்து பால் கலக்காத தேநீரில் கலந்து அருந்தி வர முறையற்ற மாதவிடாய் நீங்கும்.
  • ஒரு தேக்கரண்டி அளவு பச்சைக்காய் தண்ணீரில் கலந்து அதில் சிறிது தேன் விட்டு நன்கு கலக்கி, குடிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • அன்னாசி பழத்தினை சாறு பிழிந்து சாப்பிடும் போது அதில் சிறிது இந்துப்பு என்கிற பாறை உப்பு போட்டு கலக்கி அருந்த முறையற்ற மாதவிடாய் குறைபாடு நீங்கும்.
  • மஞ்சளை சிறிது எடுத்து பால், தேன், நாட்டு சர்க்கரை போன்றவற்றில் கலந்து உண்ண குணம் கிடைக்கும்.
  • பேரிட்சை பழம் தினம் காலை 2 அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.இது ரத்தம் ஊறவும் மாதவிடாய் காலங்களில் தெம்பு கொடுக்கவும் உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்