உடலில் வைட்டமின் டி குறைந்தால் என்ன நோய் வரும் தெரியுமா?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம். ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால் அதனால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன பிரச்சனைகள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஆஸ்துமா

அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைத்தால் அது நுரையீரலை வலிமைப்படுத்தும் மற்றும் சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ்

வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவது மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும்.

உட்காயம்

வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அதனால் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும்.

இதய ஆரோக்கியம்

இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே இப்பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் வைட்டமின் டி கிடைக்குமாறு செய்யுங்கள்.

மன இறுக்கம்

முக்கியமாக உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தால் அவஸ்தைப்படச் செய்யும்.

புற்றுநோய்

கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் போன்றவை வருவதற்கும் வைட்டமின் டி குறைபாடு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

சர்க்கரை நோய்

இன்சுலின் சீராக சுரக்கக் காரணமான பான்கிரியாடிக்-பி எனும் செல் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்