மூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

மூட்டு வலி இருப்பவர்கள் தங்கள் உடல் எடையில் அதிக கவனம் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் மூட்டு வலியும் அதிகரிக்கும்.

அவர்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்
காய்கறிகள்

மூட்டு வலி இருப்பவர்களின் உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் சத்து மிக அவசியம். அது பழங்கள், காய்கறி, கீரை வகைகளில் இருக்கிறது. எனவே அவர்கள் தினமும் உணவில் கீரை மற்றும் பழ வகைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

தண்ணீர்

மூட்டு வலி இருப்பவர்களின் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். தினமும் குறைந்தது 12 கப் தண்ணீராவது பருக வேண்டும்.மேலும் சிறுபயறு, கடலை, பெரும்பயறு போன்றவைகளை முளைவிட வைத்து சாப்பிடலாம்.

பழங்கள்

நெல்லிக்காய், ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, திராட்சை பழம் போன்றவைகளில் வைட்டமின்-சி சத்துள்ளது. இவைகளை சாப்பிட்டால் எலும்புகளும், தசையும் பலப்படும். உடலின் பலத்திற்கு கொலாஜன் மற்றும் கனெக்டிவ் திசு உற்பத்தி அவசியமாகும்.

வெண்டைக்காய்

எலும்பு பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் கிளைகோசாமினோகிளைகான்ஸின் என்ற ரசாயன மிக அதிக அளவில் உள்ளதால் இவை எலும்பு பலத்தை உருவாக்கும்.

மீன்

மீன்களில் இருக்கும் வைட்டமின்-டி சத்து எலும்பு பலத்திற்கு ஏற்றது. இதற்கு மத்தி மீன் சிறந்தது.இறால் போன்ற தோடு கொண்ட மீன் வகைகளை மூட்டு வலியுள்ளவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறு தானியங்கள்

சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கம்பு, எள் போன்ற தானியங்களில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மூட்டுகளின் வீக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

இறைச்சி

புரதச்சத்து அதிகமுள்ள இறைச்சி வகைகளை அதிகம் உண்ண வேண்டும். அதிக புரதம், எலும்புகளில் ஏற்கனவே இருக்கும் கால்சியத்தை வெளியேற்றி எலும்புகளின் பலத்தை குறைத்து விடும். அதனால் இறைச்சி வகைகளை குறைந்த அளவில் மட்டும் சாப்பிடுங்கள்.

பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை தடுக்க உதவும். அல்லிசின் பண்புகள் நிறைந்த காய்கறிகளான பூண்டு மற்றும் வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இவற்றை அன்றாட உணவில் சேர்த்து வர அது மூட்டு வலியை தடுக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் உள்ள அதிகளவிலான வைட்டமின் கே, வைட்டமின் சி, சல்போரஃபேன் போன்றவை, ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு வீக்க வலியைத் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்