உடல் எடையை குறைக்க அன்னாச்சி மற்றும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடித்தால் போதும்!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருக்கும் சிலருக்கு தொப்பை அதிகமாக காணப்படும்.

அந்த தொப்பையை குறைப்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது எந்த விதமான பலனும் இன்றி கவலையில் இருப்பார்கள்.

மேலும் உங்களின் தொப்பயை குறைத்து அழகான உடல் அமைப்பை பெறுவதற்கு தினமும் நீரில் அன்னாசி பழம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டாலே போதும்.

உடல் எடையை குறைக்க

அன்னாச்சி மற்றும் எலுமிச்சை இவற்றில் உள்ள கார தன்மை உங்களின் எடையை குறைக்க பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தையும் குறைத்து விடும்.

புற்றநோய்

எலுமிச்சை மற்றும் அன்னாச்சியில் கார தன்மை இயற்கையாகவே இருப்பதால் இவை புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றதாக உள்ளது.

சிறுநீரக கல்

கிட்னியில் ஏற்படுகின்ற கற்களை கரைய வைக்கின்ற தன்மை இந்த அன்னாச்சி எலுமிச்சை நீருக்கு உள்ளது.எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலியை குறைக்க இந்த நீர் உதவுகின்றன.மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற சளியையும், ஜலதோசத்தையும் தடுக்க அன்னாச்சி எலுமிச்சை நீர் பெரிதும் உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

எலுமிச்சை மற்றும் அன்னாச்சி ஆகிய இரண்டு பழத்திலும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இருப்பதால் இவை உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் இவை உங்கள் உடலில் நோய் கிருமிகள் தாக்குவதை தடுக்கின்றன.

ரத்த அழுத்தத்தை குறைக்க

உயை இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இதனை குடித்து வருவதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும் இவை உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைட்து கொள்ள உதவுகின்றன.

செரிமான பிரச்சினைக்கு

செரிமான பிரச்சினையை தீர்க்க எலுமிச்சை மற்றும் அன்னாசி சேர்த்த நீரே போதும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி விடும்.

பல்வலி

பல்வலியை மிக விரைவாக போக்குவதற்கு இந்த நீர் ஒன்றே போதுமாம். மேலும் பல்வலியால் அவஸ்த்தை படுபவர்கள் தினமும் இந்த நீரை பருகி வந்தால் விரைவில் குணமடையலாம்.

இளமையாக இருக்க

என்றும் இளமையாக இருக்க இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் முகத்தின் செல்கள் புத்துணர்வு பெற்று இளமையான அழகை நீண்ட காலம் பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்