தினமும் காலை உணவாக இதை சாப்பிட்டால் 3 கிலோ எடை குறைக்கலாம்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

அன்றாடம் நாம் எடுத்துக் கொள்ளும் காலை உணவே நம்முடைய உடல் ஆரோக்கியத்தினை நிர்ணயிக்கிறது.

எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவை காலை உணவாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் 3 கிலோ உடல் எடையினைக் குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்
  • உலர்ந்த ப்ளம்ஸ் - 5-7
  • குறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப்
  • ஆளி விதை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  • கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
  • முதலில் நன்கு உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு, 10-15 நிமிடம் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர், ஆளி விதை பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றுடன் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் ஊற வைத்துள்ள ப்ளம்ஸ் பழத்தை அரைத்து அல்லது துண்டுகளாக நறுக்கி போட்டு அதை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
  • இதை முதல் நாள் மாலையில் தயார் செய்து வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும்.
குறிப்பு
  • மேற்கூறப்பட்ட உணவை சாப்பிட்டு வரும் போது தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதுடன், தண்ணீர், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்