உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதனை முகர்ந்தாலே போதும்

Report Print Kabilan in ஆரோக்கியம்

உடல் எடையை வெகுவாக குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லுதல், குறைந்த உணவுகளை சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்த்து வேறு சில விசித்திரமான முறைகளை கையாளலாம்.

இது போன்ற செயல்கள் நம்பிக்கை சார்ந்ததாக இருந்தாலும், அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சில செயல்களை செய்து எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

புதினாவை முகர்ந்து பார்த்தல்

புதினா அல்லது வாழைப்பழத்தை அடிக்கடி முகர்ந்து பார்க்கும்போது, உங்களின் பசியை இது குறைத்துவிடும். இதன்மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீல நிறம்

உடல் எடையை குறைப்பதற்கான புதுவித முறை நீல நிறமாகும். அதாவது, உங்களது வீட்டை சுற்றி நீல நிறமாக அலங்கரித்து கொண்டால், பசியை வெகுவாக குறைத்து விட இயலும்.

குறிப்பாக வீட்டில் உள்ள சமையல் அறை, தட்டு, சாப்பிடும் அறை, உடை ஆகியவற்றை நீல நிறத்தில் இருக்கும் வண்ணம் மாற்றியமைத்துக் கொண்டால், அதிக அளவில் பசியை தூண்டாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை உணவு

காலை நேர உணவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உடல் எடையை கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதாவது காலையில் 700 கலோரிகளும், மதியம் 500 கலோரிகளும், இரவு நேரத்தில் 200 கலோரிகளுமே உடல் எடை கூடுதலாக இருப்பவர்களும் போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட நிறங்களை தவிர்த்தல்

சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களை அதிகளவில் வீடுகளில் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை பசியை அதிகரிக்க செய்யும். இதனால் சாப்பிடும் எண்ணம் அதிகரிக்கும். எனவே, இந்த நிறங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

அதிக ஊறுகாய்

அதிக அளவில் ஊறுகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், எளிதில் உடல் எடையை குறைத்து விடலாம். ஏனெனில், ஊறுகாயில் உள்ள வினிகர் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியவை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, கொழுப்புகள் உருவாவதை தடுக்கும்.

முட்டை

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு எளிய வழி, காலை உணவில் முட்டை சேர்த்துக்கோள்வதாகும். ஒரு முட்டையை காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலமாக, விரைவிலேயே உடல் எடையை குறைத்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உணவுக்கு முன்பு நீர்

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் பருகுவதன் மூலம், உடல் எடையை குறைக்க முடியும். இதன்மூலம் நம்மை குறைந்த அளவில் கலோரிகளை எடுத்துக் கொள்ள செய்து, உடல் எடையை கூடாமல் பார்த்துக் கொள்ளும்.

உணவுக் கட்டுப்பாடு

நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவுகளில், எந்த அளவிற்கு கலோரிகள் உள்ளன என்பதை அறிந்து அவற்றை சாப்பிட்டு வந்தாலே உடல் எடையை கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சில விசித்திர வழிமுறைகள்

வயிற்றில் ரிப்பனை கட்டிக்கொள்ளும் முறையை பலர் பயன்படுத்துகின்றனர். அதாவது, இரவு விருந்திற்கோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கு செல்லும்போதோ, தங்களது உடையுடன் சேர்த்து ரிப்பன் ஒன்றை வயிற்றுப் பகுதியில் கட்டிகொள்வர். இது அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தி எடையை குறைக்கப் பயன்படும்.

ஜங்க் மெயில் எனும் முறையை உலகில் பல்வேறு நாட்டு மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த முறையானது, மெயிலில் வைத்துள்ள ஜங்க் மெயிலின் அளவிற்கு ஒவ்வொரு நாளும், உங்களின் வீட்டை சுற்றி நீங்கள் ஓட வேண்டும் என்பதாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்