வேண்டாம் என தூக்கி ஏறியும் பப்பாளி விதையில் இவ்வளவு மருத்துவப்பயனா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக்கொண்டு பப்பாளியை சாப்பிட்டாலும் முதலில் அதன் விதைகளை வழித்துத் தூக்கி எறிந்துவிடுவோம்.

உண்மையில் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதைவிட அதன் விதைகளில் தான் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. பப்பாளி விதையினை சாப்பிடுவதனால் உடலில் பல்வேறு நோய்கள் பறந்து விடுகின்றன. அவை என்ன என்ன என்பதை பார்பபோம்.

வயிற்றுப் பூச்சியை அழிக்கும்

தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது. பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.

இயற்கை கருத்தடை

குழந்தைப் பேறினை தள்ளிபோட வேண்டும் என நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகளுக்கு போகாமல் இந்த பப்பாளி விதைகளை உண்ணலாம். இவை இயற்கையாகவே கருத்தரிக்க விடாமல் செயல்படும்.

கேன்ஸர் செல்களை தடுக்கும்

இவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் கேன்ஸர் செல்கள் உருவாகாது என ஆய்வு கூறுகின்றது.

வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்

பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, ஆகியவற்றால் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்கும் இந்த பப்பாளி விதைகள்.

கிருமிகளை தூர விரட்டும்

நோயை உருவாக்கக்கூடிய, ஸ்டைஃபைலோ கோக்கஸ், ஈ கோலை, மற்றும் சால்மோனெல்லா ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, அவைகளை உடலினுள் வர விடாமலும் தடுக்கின்றன. இவற்றால், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் காய்ச்சல்களை நம்மை அண்ட விடாது.

கல்லீரலை பாதுகாக்கும்

பப்பாளி கல்லீரலுக்கு தேவையான ஆரோக்கியமான போஷாக்கைத் தரும். லிவர் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். பப்பாளி விதைகளை பேஸ்ட் செய்துஅதனை எலுமிச்சை சாற்றில் கலந்து குடிக்கலாம்.

சிறு நீரக செயல்பாடு

சிறு நீரக செயல்பாட்டினையும் நன்றாக தூண்டும். இதனால் உடலில் தீங்கைத் தரும் நச்சுக்களும் கழிவுகளும் எளிதில் வெளியேறுகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers