20 நாட்கள் தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

நமது வீட்டு சமையல் அறையில் இருக்கும் சீரகத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

உடல் எடையை குறைக்க
  • இரவு முழுக்க சீரகம் ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் பாதி எலுமிச்சையை பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
  • இல்லையென்றால் அப்படியே இந்த நீரை குடித்தும் வரலாம். இவ்வாறு 20 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை எளிமையாக குறையும்.
  • மேலும் சீரக நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, சிறிது இலவங்க பொடியை சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மன அழுத்தம் குறைந்து, இன்சுலின் அளவு சீராக அதிகரிக்கும்.

சீரக தண்ணீரின் நன்மைகள்
உணவு செரிமானம்
  • காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது.இது உடலின் அஜீரண பிரச்சனைகளை தடுத்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
நச்சுகளை அகற்ற உதவும்
  • சீரக நீரில் ஆக்சிஜனேற்ற சக்தி அதிகமாக உள்ளதால் அது உடலில் இருந்து கிருமிகளை வெளியேற்றுகிறது. இதன் மூலம் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயலாற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
  • சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதன் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் சீராக பணியாற்றுகிறது.1 டம்ளர் சீரக நீரில் ஒரு நாளுக்கு பரிந்துரைக்க பட்ட இரும்பு சத்து உட்கொள்ளலில் 7% பூர்த்தியாகிறது.
சுவாச மண்டலம்
  • 1 டம்ளர் சீரக நீர் குடிப்பது, மார்பில் சளி நீர்த்துப்போக உதவுகிறது. அதன் ஆன்டிசெப்டிக் பண்புகள் சளி மற்றும் இருமல் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்ல உதவும். இதன் மூலம் சுவாசமண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.
தூக்கத்தின் தரம் அதிகரிக்கும்
  • சீரக நீர் அருந்துவதால் தூக்கமின்மை என்னும் நோயை நம்மால் அதிக அளவில் குணப்படுத்த முடியும்.சீரகம் மூளையின் சக்தியை அதிகரிக்க உதவுவதோடு தூக்கத்தின் சிறந்த தரத்தையும் அதிகரிக்கும்.
சருமம்
  • சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிப்பதற்கு சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது.
முடி உதிர்வு
  • சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers