7 நாட்கள் தொடர்ந்து காபியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளாம்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

காலையில் எழுந்ததும் காபி குடிக்க நிறைய பேருக்கு பிடிக்கும். பலருக்கும் காபி குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்று தான் தெரியும்.

பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிரது. ஆனால், இதனை தினமும் உடலுக்கு பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கிறது

மேலும் தினமும் குடிக்கும் காபியுடம் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • சூடான காபி - 1 கப்

 • தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

 • தினமும் குடிக்கும் சூடான காபியில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு குடியுங்கள்.

 • இப்படி தினமும் இந்த காபியை குடித்து வந்தால் உடலில் மெட்டா பாலிசம் அதிகரித்து என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.

தேங்காய் எண்ணெய் காபி நன்மைகள்

 • தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதோடு, இது இயற்கையாக உடலின் வெப்பத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும்.

 • தேங்காய் எண்ணெய் காபி உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

 • தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மலமிளக்கி என்பதால் குடல் ஊட்டச்சத்துகளை எளிதில் உறிஞ்சி மலத்தை இலகுவாக வெளியேற்றுகிறது.

 • தேங்காய் எண்ணெய்யில் 50% லாரிக் அமிலம் உள்ளது. மேலும் இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் நமது உடலில் நுழையும் கிருமிகளை அழித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 • தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.

 • காபியுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடிக்கும் போது நமது உடலில் கீட்டோன்கள் அதிகமாகி மூளையை சுறுசுறுப்பாக்குகிறது.

எச்சரிக்கை

 • பொதுவாக ஒரு நாளைகு 4 கப் காபிக்கு அதிகமாக குடிக்கும் போது இதயம் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்றவை ஏற்படலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்