நகச்சுத்தியால் அவதிப்படுபவர்களுள் நீங்களும் ஒருவரா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும்.

இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக உண்டாக்கி விடும். அது மட்டுமின்றி நகத்தின் அழகையே கெடுத்துவிடும்.

இங்கு அதற்கான எளிய நாட்டு வைத்தியமுறை பார்ப்போம்.

தேவையானவை
  • மருதாணி பவுடர் ‍ - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கிராம்பு- நான்கு
  • கடுகு எண்ணை - ஒரு தேக்கரண்டி
  • நீலகிரி தைலம் - ஒரு தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
  • டீ தூள் - ஒரு தேக்கரண்டி
  • தண்ணீர் - முக்கால் கப்
  • ச‌ர்க்க‌ரை - அரை தேக்க‌ர‌ண்டி
செய்முறை

முதலில் த‌ண்ணீரை கொதிக்க‌ வைத்து அதில் டீ தூளை போட்டு ந‌ன்கு கொதிக்க‌விட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி வ‌டி க‌ட்ட‌வும்.

பின்பு ம‌ருதாணியில் , ம‌ஞ்ச‌ள் தூள் சேர்க்க‌வும், கிராம்பை பொடி செய்து சேர்க்க‌வும், எலுமிச்சையை சாறெடுத்து ஊற்றி க‌ல‌க்க‌வும். இதில் வ‌டிக‌ட்டிய‌ டீ டிகாச‌னை தேவைக்கு க‌ல‌ந்து கொள்ள‌வும்.

க‌டை‌சியாக‌ கடுகு எண்ணை, நீல‌கிரி தைல‌ம் சேர்த்து க‌ல‌ந்து சிறிது நேர‌ம் ஊற‌வைத்து ஆறிய‌தும் அதை கையில் உள்ள‌ ந‌க‌த்துக்கு தொப்பி போல் வைக்க‌வும்.

இது தொட‌ர்ந்து முன்று நாட்க‌ள் வைக்க‌வும், முத‌ல் நாள் வைக்கும் போதே வ‌லி எல்லாம் குறைந்து விடும்.

குறிப்பு: குளுமை உட‌ம்பு உள்ள‌வ‌ர்க‌ள், ம‌ருதாணி வைத்தால் உட‌னே ச‌ளி பிடிக்கும், தும்ம‌ல் வ‌ரும் என்ப‌வ‌ர்க‌ள். ஒரு ம‌ணி நேர‌த்துக்கு மேல் வைக்க‌ வேண்டாம். அப்ப‌டியே வைத்தாலும், கை ம‌ணிக்க‌ட்டு, க‌ழுத்து ந‌ர‌ம்புக‌ளுக்கு ஏதாவாது ஒரு தைல‌த்தை த‌ட‌வி கொள்ள‌வும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்