வெறும் வயிற்றில் தினமும் இந்த ஜீஸ் ஒரு கப் குடிங்க! நன்மைகள் ஏராளம்

Report Print Jayapradha in ஆரோக்கியம்

ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க செயற்கை வழியை காட்டிலும் இயற்கையான முறைகளை பின்பற்றினால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.

அந்த வகையில் தினமும் காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

தேவையானவை
  • கேரட்- 4-5
  • இஞ்சியை- தேவையான அளவு
செய்முறை
  • முதலில் கேரட்டை நன்கு சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியை துறுவலாக மாற்றி அவை இரண்டையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டினால் கேரட் இஞ்சி ஜூஸ் தயார்.
நன்மைகள்
இதய ஆரோக்கியம்

கேரட் இஞ்சி ஜூஸானது இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரித்து இதய நோய் வரமால் பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள விட்டமின் சி பக்கவாதம் வரமால் தடுக்க உதவும்.

கண் பார்வை

கண் பார்வை குறைபாடு இருந்தால் கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் பார்வை நரம்புகள் வலிமையடைவதுடன் கண் பார்வை சீராகும்.

புற்றுநோய்

கேரட் இஞ்சி ஜூஸில் உள்ள விட்டமின் சி புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். பெண்கள் இதனை தினமும் குடித்து வந்தால் கருப்பை புற்றுநோய் வரமால் தடுக்கலாம்.

ஆரோக்கியமான சருமம்

தினமும் காலையில் ஒரு டம்ளர் கேரட் இஞ்சி ஜூஸ் குடித்தால் அவற்றில் உள்ள விட்டமின் சி மற்றும் ஈ சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து முதுமையைத் தடுத்து என்றும் இளமையுடன் இருக்க உதவும்.

நோயெதிர்ப்பு சக்தி

கேரட் இஞ்சி சாற்றில் வைட்டமின் ஏ உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடி இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரித்து உடலில் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

செரிமான பிரச்சனை

இந்த ஜூஸை தினமும் குடிப்பதால் உடலில் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் பல வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன.

மூட்டு வலி

இந்த ஜூஸை தொடர்ச்சியாக குடித்து வந்தால் தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.

வாய் தூர்நாற்றம்

பற்கள் மற்றும் ஈறுகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பதுடன் வாய் தூர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்