உருளைக் கிழங்கினை உண்ணாது ஒதுக்கி வைப்பவரா நீங்கள்?

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

சுவையற்ற தன்மை காரணமாக உருளைக் கிழங்குகளை உணவாக எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை.

அதேநேரம் உடற்பருமன் அதிகரிக்க உருளைக் கிழங்கும் ஒரு காரணம் என எண்ணி அதைப் புறக்கணிக்கின்றனர்.

கடந்த 4 வருடங்களில் இதன் விற்பனையும் 5.4 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

ஆனால் வேக வைத்த ஒரு உருளைக் கிழங்கு நமக்கு 100 சதவீத கலோரியைத் தருகிறது.

அத்துடன் கொழுப்பற்றது, கொலஸ்ரோலற்றது, குளுட்டனோ, சோடியமோ அற்றது.

மேலும் இதன் மூலம் வைட்டமின் - C இன் நாளாந்தத் தேவையின் அரைப்பங்கும், வாழைப்பழத்திலும் அதிகமான பொட்டாசியமும், அதிகளவான வைட்டமின் - B6, நார்கள், மக்னீசியம் மற்றும் அன்ரியொக்சிடன்களும் கிடைக்கின்றது.

இது மாப்பொருளை அதிகம் கொண்டுள்ளது, இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச்செய்கிறது.

அதேநேரம் இது குரதிவெல்லத்தின் அளவைக் கட்டுப்பாட்டில் பேணுகிறது, சமிபாட்டு ஆரோக்கியத்தை வழங்குகிறது, உடலில் வீக்கங்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகின்றது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது, குருதி ஓட்டத்தை விருத்தி செய்கிறது.

இவ் உருளைக் கிழங்கானது ஒருவரது செயற்பாட்டை அதிகரிக்கக்கூடியது என சொல்லப்படுகிறது.

இனிமேலாவது இதை ஒதுக்கி வைக்க முன் ஒருதடவை யோசியுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்